கவிதைகள்

கவிதைகள் – இலக்குமி

தாய்

அள்ளி அணைப்பதனால் அவள் அன்னை !
தா என்று கேட்கும் முன்னே தருவதனால் அவள் தாய் !
அன்பின் ஊற்றாய் இருப்பதனால் அவள் அம்மா !
மனம் அறிந்து தவறுகளை மன்னிப்பதனால் அவள் மாதா !
பெண்மையின் மென்மையே தாய்மை !
பெற்ற தாயைப் பேணுவோம்!! பெருமைக்குறிிய தாய்மையைப் போற்றுவோம் !!

மழை

மழையே மழையே பொய்த்து விடாதே !
உழவர்கள் உயிரை மாய்த்து    விடாதே !
பருவ மழையே பெய்து விடு !
பாசன பயிர்களை வாழவிடு !!
பசியை உறவாக்கி உணவை பகையாக்கி
மனித உயிர்களை மண்ணுக்கு உரமாக்கும் மழையே _
இதுதான் மரங்களை அழிக்கும் மனித இனத்துக்கு
நீ அளிக்கும் மரண தண்டனையா ??
தண்டனையை தவிர்த்து விடலாம் பணம் படைத்திட்ட மனிதனே _
நீ இயற்கையை காத்திடும் மனம் படைத்திருந்தால் !!

மரம் வளர்ப்போம்

மண்ணுக்கு _ மரம் உடல் போன்றது !
மழை உயிர் போன்றது !
மரம் வளர்ப்போம் ! மண் வளம் காப்போம் !
மழை வள(ர)ம் பெறுவோம் !

தமிழ் மக்கள்

அன்று அவதியுற்றோம் அரசியல் அசுரர்கள் பதுக்கிய நோட்டுக் கட்டால்
அடுத்து நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த முதல்வர் அப்பலோவில் படுத்து விட்ட மர்மக் கட்டால்_
தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டால்_
இன்று நெடுவாசலில் மீத்தேன் எரிவாயுவுக்கு எதிராக நடக்கும் மல்லுக்கட்டால் !
இவை அனைத்தும் தொடர்கிறது உங்களது அறியாமை எனும் கண்கட்டால் !
விழிப்புணர்வுடன் ஒன்றுபடுங்கள் |
விவேகத்துடன் விரைந்து செயல்படுங்கள் !
வெற்றி நிச்சயம் !!

லஞ்சம்
ஊழல் பெருச்சாளிகள் பெறும் ஊதியம் !
மாதத்தில் ஒரு நாள் வாங்கினால் – சம்பளம்
மாதம் முழுவதும் வாங்கினால் – லஞ்சம்
அவரவர் வேலையைச் செய்ய அரசாங்கம் தருவதோடு ஆளுக்கும் வேலைக்கும் தகுந்தார் போல அவரவர் வாங்கிக் கொள்ளும் அடிஷனல் போனஸே – லஞ்சம் !!
லஞ்சம் பெறுவதும் குற்றம் !
அதைக் கொடுப்பதும் குற்றம் !
லஞ்சத்தை தடுப்பதே நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றம் !!

காதல்
எதையும் எதிர்பாரா
தூய அன்பே காதல் !
பிரதிபலன் இன்றி ஓருயிர் மற்றொரு உயிர் மீது காட்டும் பாசமே காதல் !
இதயத்திற்கு நெருக்கமான நேசமே காதல் !
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வருவது மட்டுமல்ல காதல்
இந்த மண்ணுக்கும் நமக்கும் ஆன பற்றும்
இயற்கையோடான நம் ஈடுபாடும்
கருவுக்கு உருக் கொடுக்ககும் தாய்க்கும் குழந்தைக்கும் ஆன கலப்படமற்ற தூய அன்பும்
உயிரை பயிர் செய்யும் தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையில் பின்னிய பிரியமும்
உடன் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் செலுத்தும் உண்மையான பாசமும்
நம்பிக்கையுடன் நம்முடன் இறுதி வரை நடை போடும் நண்பர்கள் காட்டும் ஆழமான நட்பும்
வளர்க்கும் பிராணிகளிடம் நாம் வாஞ்சையுடன் காட்டும் பரிவும்
காதலின் கவினுறும் பரிமாணங்களே !! எனவே அனைவரும் அசத்தலாய் அசராமல்
காதல் செய்வீர் !!

அன்பு

அன்பு எனும் மலர் எடுத்து அதை _
நட்பு எனும் நாரால் தொடுத்து _
மனித மனம் எனும் கூந்தலில் சூட்டி _
மகிழ்ச்சி எனும் மணம் பரப்பி _
ஒற்றுமை ஓங்க வழி செய்வோம் !
உயிர்கள் வாழும் இவ்வுலகிலே !!

நம்பிக்கை

யானைக்கு பலம் தும்பிக்கை
மனிதனுக்கு பலம் தன் நம்பிக்கை !
எனவே வாழ்க்கையில்
நம்பி(க்)கையுடன் காலும்(அடி) எடுத்து வையுங்கள் _
வெற்றி நிச்சயம் !!

சுகாதாரம்

மாசற்றற நீரும்  தூசற்ற காற்றும்
நோய(யு)ற்ற வாழ்விற்கு விலையற்ற மருந்து !!
சுத்தம் சுகாதாரம் மனித வாழ்வுக்கு ஆதாரம் !!

கல(ர்)ப்படம்
🍁🍁🍁🍁🍁
ஏய் மனிதா !
சுவாசிக்கும் காற்றையும் பருகும் நீரையும் கூட விட்டு வைக்கவில்லை உன் கலப்படம் _
எனவே தான் மருத்துவமனையில் உனக்கு எடுக்கிறார்கள் சுருள்படம் (E.C.G.)
இதுவே நீடித்தால் நாளை உன் வீட்டுச் சுவர்களில் மாலையுடன் தொங்கப் போவது உன்னுடைய கலர்ப்படம் !! 😭😭

இறைவன் !
நமக்கு மேல் இருந்து நம்மை இயக்குவதால் அவன் இறைவன் !
அருவும் உருவுமாய் நம் ஆன்மாவில் இணைந்து நம்மை ஆள்வதால் அவன் ஆண்டவன் !
நம் வேண்டுதலுக்கு இசைய உண்டியலில் காசை கணக்கில்லாமல் வசூலிப்பதால் அவன் கடவுள் !
நமக்கு பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவதால் அவன் பரம்பொருள் !
நாம் புறக்கண்களால் தேடினால் தெரியாமல் நாம் அகக்கண்கள் கொண்டு தேடினால் மட்டுமே தெளிவாய் தெரிவதனால் அவன் தேவன் !                               கற்சிலையாய் மட்டும் இல்லாமல் நம் கண்களுக்கு புலப்படாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் அவன் ஏகாந்தன் !
பல் உருவமாய் பல நாமங்கள் கொண்டு நம்மை படைத்தவன் திகழ்ந்தாலும் –
ஒன்றே குலம் ஒருவனே தேவன் !!

கைபேசி!!
📞📞📞📞.
கண்களால் பேசியது மறந்து
காதுக்கு அருகே என்னை கைகளில் வைத்து
கால் கடுக்க நின்று காதலர்கள்
மெய் மறந்து மணிக் கணக்கில் மனம் விட்டுப் பேசுவதால்
கைபேசி ஆனேனோ ??
நான் இருந்தால் போதும் பசி தூக்கம் தேவையில்லை
நானிலத்தில் எவருக்கும் !
ஓயாத அலையெனவே அழைப்புக்கள் வருவதனால் அலைபேசி என்றும் அழைக்கின்றார் என்னை !
இன்று ஆவதும் என்னாலே அழிவதும் என்னாலே !
ஆம் ! பல நன்மைகள் ஆவதும் என்னாலே !
பலர் கெட்டு அழிவதும்
என்னாலே !
வாகனங்களில்
சென்றாலும் வழி நடையாய் சென்றாலும்
தனியாக சிரிக்கின்றார்
பைத்தியம் போல் உளறுகின்றார்
என்றே தான் உடனிருப்போர் உன்னிப்பாய் உற்று நோக்கினால் என்னோடு தான் உளறுகின்றார் என்கின்ற உண்மையினை ஊரரியச் செய்திடுவார் !
உலகரியச் சொல்லிடுவார் !
சாதாரண நோக்கியாவாய் உருவெடுத்த நான் இன்று ஆப்பிள் ஐ போனாய் அவதாரம் எடுத்துள்ளேன் !
ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த நான் இன்று மலிவு விலையிலும் மார்க்கெட்டில் மலை போல குவிந்து கிடக்கிறேன் !
அம்பானி முதல் அடிமட்ட குடிமகன் வரை இன்று நான் இல்லாத ஆளில்லே !                                     நாளை என்னை மளிகை கடைகளில் விற்றாலோ இல்லை –
அரசாங்கம் அறிவிக்கும் இலவசப் பொருட்களில் இணைத்தாலோ ஆச்சரியப்படுவதற்கு இல்லை !
அன்பார்ரந்த வாடிக்கையாளர்களே ! உங்களுக்கு இந்த கைபேசியின் கனிவான வேண்டுகோள் !
வண்டிகளில் செல்கையிலே செல்பேசி என்னுடனே பேசி கவனத்தை சிதற விட்டு
விபத்துகளில் சிக்கி விலை மதிப்பில்லா உயிரினை மாய்த்து இவ்வுலகை விட்டுச்செல்லாதீர் !!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s